ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு  கணினி  ஆய்வகம் திறப்பு : 

 

 திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் அமைந்துள்ள  ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவை பள்ளி தாளாளர் விஷ்ணுசரண்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 

பள்ளி இயக்குநர்கள் அருளரசு மற்றும் பரணிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.பள்ளியின் முதல்வர் யால்டா நாகலட்சுமி முன்னிலை வகித்தார்.

 

திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து,கணினியும் அதன் சிறப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

 

ஆய்வகத்தில் கணினி தொடர்பான அனைத்து ஆய்வுகளும் சிறப்பான  முறையில் மேற்கொள்ளும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

இதில் பள்ளி துணை முதல்வர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.
Image
புதுவை அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம்
Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு நிவாரணத் தொகை - எஸ்பி வழங்கினார்
Image